திருச்சி மாவட்டம் துறையூர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து காலை 11 மணியளவில் மினி பேருந்து சுமார் 30 பயணிகளுடன் காவேரிப்பட்டி கிராமத்திற்கு சென்றது பேருந்து நாகம்மா நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த மணி என்பவர் ஓட்டி வந்தார். பேருந்து வாலிஸ்புரம் அருகே சென்ற போது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்தது இதனை அடுத்து சுமார் எட்டுக்கும் மேற்பட்ட 108 வாகனங்கள் மூலம் பேருந்தில் பயணம் செய்த பயணிகளை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர் சம்பவ இடத்திற்கு வந்த துறையூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் விசாரணை மேற்கொண்டதில் நாகமநாய்கன்பட்டி பகுதியை சேர்ந்த ஓட்டுநர் மணி செல்போன் பேசியபடி பேருந்து இயக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.