
- துளியும் கசப்பே இல்லாத பாகற்காய் ரசம்
தேவையான பொருட்கள் :
பாகற்காய் – கால் கிலோ,
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,
புளி – கோலி அளவு,
கொத்தமல்லித் தழை – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு
தாளிக்க:
காய்ந்த மிளகாய் – 3,
கறிவேப்பிலை – சிறிதளவு,
கடுகு, வெந்தயம் – தலா ஒரு டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை,
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்.
செய்முறை:
புளியை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும்.கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்கவும்.பாகற்காயை நீளவாக்கில் நறுக்கி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, புளியைக் கரைத்து ஊற்றி வேகவிடவும்.
பாகற்காய் வெந்து, புளிக்கரைசல் ரசம் பதம் வந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.அடுத்து கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து ரசத்தில் சேர்த்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.இப்போது சூப்பரான பாகற்காய் ரசம் ரெடி.இதை சாதத்துடன் சாப்பிடலாம். கிண்ணத்தில் ஊற்றி சூப் போன்றும் குடித்தால், பாகற்காயின் முழுப் பயனும் கிடைக்கும்.