
- துவரம்பருப்பு ரசம்
தேவையானவை :
துவரம்பருப்பு – கால் கப்
தக்காளி – 2
பூண்டு – 4 பல்
உப்பு – தேவையான அளவு
புளி – சிறிய எலுமிச்சம்பழ அளவு
மஞ்சள்தூள் – சிறிதளவு
பொடி செய்ய தேவையானவை :
துவரம்பருப்பு – ஒரு டீஸ்பூன்
மிளகு – ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 3
சீரகம் – 1/2 டீஸ்பூன்
மல்லி – 3 டீஸ்பூன்
தாளிக்க தேவையானவை :
கடுகு – சிறிதளவு
உளுத்தம்பருப்பு – சிறிதளவு
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை
1. முதலில் மிக்ஸ்சியில் துவரம்பருப்பு, மல்லி, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை தனித் தனியே கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் துவரம்பருப்புடன் மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்கவும்.புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.இதனுடன் தக்காளியைச் சேர்த்து நன்கு கரைக்கவும். பின்னர் உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
2.மேலும் அதனுடன் எண்ணெயில் பூண்டை லேசாக தட்டி வதக்கி போடவும்.இது கொதித்ததும் தனியே பொடித்து வைத்த பொடியைப் போட்டு, ஒரு கொதி வந்ததும் வேகவைத்த பருப்பை நீருடன் சேர்க்கவும்.அனைத்தும் கொதித்து நுரையுடன் பொங்கி வரும் போது இறக்கி வைக்கவும்.தனியே வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து இறக்கிவைத்துள்ள ரசத்தில் சேர்க்கவும்.