இன்றைய காலகட்டத்தில் பலரும் இரவு நேரங்களில் கண்களுக்கு ஓய்வு தந்து தூங்குவது கிடையாது, ஆனால் தூக்கம் என்பது மிகவும் அவசியமான ஒன்று தூங்கும் நேரத்தில் தான் நமது உடலில் உள்ள உறுப்புகள் எல்லாம் ஓய்வு எடுத்துக் கொள்ளும் அதன் ஓய்வு நேரத்தில் வேலை நேரமாக மாற்றும்பொழுது உடல் சோர்ந்து போவது மட்டுமல்லாமல் உடலில் உள்ள உறுப்புகள் எல்லாம் பழுதடைய செய்யும்..
தூக்க பிரச்சனைகள் தொடர்ந்து இருந்தால் மன அழுத்தம் ஏற்படும் அதிகம் கோபம் டென்ஷன் இயலாமை தாழ்வு மனப்பான்மை தலை தூக்கும் இதனால் ஹார்மோன் பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது, இதனால் சீக்கிரம் முதுமை தோற்றம் உண்டாகி தலை மயிர்கள் நரைக்க ஆரம்பித்து விடும் தினமும் குறைந்தது 7 மணி நேரம் தூக்கம் கட்டாயம் தேவை தூக்கம் சரியாக இருந்தால் மட்டுமே உடல் ஆரோக்கியமாக இருக்கும் மேலும் உடலில் உள்ள ஹார்மோன்கள் சுரப்பு சீராகவும் இருக்கும், முக்கியமாக சருமம் வளமாக இருக்க தேவையான கொலாஜன் எனப்படும் ஹார்மோனின் சுரப்பு நன்றாக இருக்கும் இந்த சிறப்பானது தூக்கத்தினால் மட்டுமே ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர், ஒரு மனிதனுக்கு அவசியம் தூக்கம் தேவை அவன் தூங்குவதன் மூலம் மட்டுமே அவனின் உடலில் உள்ள உறுப்புகள் எல்லாம் ஆரோக்கியமாக இருக்கும்..!!




