
நமது வாழ்வில் ஆரோக்கிய குறைவு தூக்கத்தை கெடுக்கும். அதே சமயம் மோசமான தூக்கம் உடல்நலக்குறைவுக்கான ஒரு முன்னேச்சரிக்கையாகவோ அல்லது ஆபத்தாகவோ இருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்தாக உள்ளது. அந்த வகையில் தூக்கம் தொடர்பாக ஆய்வு நடத்திய ஆஸ்திரேலியாவின் FLINDERS பல்கலைக்கழகம் ஓர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
அதாவது உலகில் 31% சதவீத இளைஞர்கள் தினமும் 7-9 மணி நேரம் தூங்குவதில்லை என தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் 68 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், ஆண்களை விட பெண்களை அதிக நேரம் தூங்குவதாகவும், குழந்தைகள், முதியவர்களை விட இளம் வயதில் இருப்பவர்கள் மிகக் குறைவான நேரத்தை தூக்கத்திற்கு ஒதுக்கவதாகவும் தெரியவந்துள்ளது. தற்போது இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.