நீங்கள் தலையணை இல்லாத தூக்கம்..!! உங்கள் உடலில் நிகழ்த்தும் மாற்றம்..!!

தலையணை இல்லாமல் தூங்குபவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஏனெனில் இங்கு தலையணை வைத்து தூங்குவதை நம் மரபாகவே நாம் நினைத்து விட்டோம். இன்னும் சிலர் தலைக்கே இரண்டு தலையணை வைத்து தூங்குவார்கள்.

இன்னும் சிலர் இருக்கிறார்கள். இவர்களுக்கு காலுக்கு, பக்கத்தில் கட்டிப்பிடித்து படுக்க என வித, விதமாக தூங்குவதற்கு தலையணை ஸ்டைல் வைத்திருப்பார்கள். இப்படியான தலையணையே இல்லாமல் தூங்குவதில் தான் நம் ஆரோக்கியமே இருக்கிறது.

தலையணை இல்லாமல் தூங்குபவர்களுக்கு தண்டுவடம் அதன் இயல்பான நிலையில் இலகுவாக இருக்கும். இதனால் உடல்வலி, தண்டுவட பிரச்னை எட்டியே பார்க்காது. உயரமான தலையணை பயன்படுத்தும் போது படுக்கை நிலை குலையும். தண்டுவடமும் பாதிக்கப்படும். தலையணை இல்லாமல் தூங்கினால் தோள்பட்டை, கழுத்து வலியும் வராது.

இதனால் உடலின் எலும்புகளையும் சீராக்க முடியும். தலையணை பயன்படுத்தாமல் தூங்குபவர்களுக்கு முகச்சுருக்கமும் இருக்காது. சிலர் நேராக படுத்து தூங்குவார்கள். அவர்களுக்கு மெல்லிய தலையணையே சிறந்தது. இது கழுத்து, தலை, தோள்பட்டை பிரச்னைகளில் இருந்து காக்கும். சிலர் ஒருசாய்த்து அதாவது ஒருபக்கமாக படுப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். இவர்களுக்கு அடர்த்தியான தலையனை வைத்து படுத்தால் தோள்பட்டை, காதுக்கு இடையே சமநிலையை ஏற்படுத்தும்,.

குப்புறப்படுத்தும் தூங்குபவர்களுக்கு தட்டையான தலையணை ரொம்ப சிறந்தது. இது நம் தலையில் நிலையை அசொளரியமாக உணராமல் இருக்க உடதவுவதோடு, முதுகு, இடுப்பு வலியையும் விரட்டும்..

ஆனால், இதையெல்லாம் விட நாம் முன்பே சொன்னது போல் தலையணை இல்லாத தூக்கம் தான் நோய்களை விரட்டும். சிலருக்கு மருத்துவர்கள் தலையணை வைத்து தூங்க பரிந்துரைத்து இருப்பார்கள். அவர்கள் இந்த டிப்ஸை தவிர்த்து விடுவது நல்லது.

Read Previous

வங்கியில் வழங்கப்படும் வட்டி விகிதம்..!! 3 ஆண்டுகளுக்கு எவ்வளவு தெரியுமா?..

Read Next

அன்பான கணவனும் மனைவியும் இணைந்துவிட்டால் வாழ்க்கை சொர்க்கம் தான்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular