தூங்கப் போகும் போது இந்த தவறை மட்டும் செய்யவே செய்யாதீர்கள்..!! உங்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?..!!

நல்ல தூக்கம் என்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம். ஒரு வயது வந்தவர் ஏழு முதல் ஒன்பது மணி நேரம் வரை இடைவிடாது தூங்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர் .இதில் சீக்கிரம் படித்து சீக்கிரம் எழுவது என்பது உலகம் முழுவதும் பரிந்துரைக்கப்படும் நடைமுறையாக இருக்கிறது. இந்த நிலையில் இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் தூக்கத்திற்கான அவசியத்தை வலியுறுத்துகின்றன.

மனநல ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு கட்டுரையில் அதிகாலை 1 மணிக்குள் படுக்கைக்கு செல்வதால் பதற்றம் மற்றும் மனசோர்வு போன்ற நடத்தை சீர்குலைவுகளின் அபாயத்தை குறிக்கும் என்று முடிவுகள் தெரிவிக்கின்றன. 74 ஆயிரம் பேரின் தூக்கம் முறைகள் ஆய்வு செய்து அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்பாளரின் விருப்பமான தூக்க நேரத்தை க்ரோனடை எனப்படும் அவர்களின் உண்மையான தூக்க பழக்கங்களுடன் ஒப்பிட்டு உள்ளனர். தூக்கம் ஒருவரின் மன ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதை ஆய்வு செய்தபோது சரியான நேரத்தில் தூங்குபவர்களுக்கு நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் தூக்க நேரம் மற்றும் ஆழ்ந்த தூக்கம் குறித்து ஆய்வு செய்தபோது தூக்கத்தை ஒவ்வொரு நாளும் சரியான நேரத்தில் மேற்கொள்வது மிகவும் நல்லது என்றும் தாமதமாக தூக்கம் வருவது மன ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்றும் தெரியவந்துள்ளது.

அதிகாலை ஒரு மணிக்கு பிறகு தூங்கச் செல்வதை குறிக்கும் வகையில் இரவு ஆந்தைகள் என்று குறிப்பிட கூறப்படுவோருக்கும், சீக்கிரம் தூங்குபவருக்கும் இடையே இருக்கும் மனக்கோளாறுகள் பெரிய வித்தியாசத்தை கொடுத்திருப்பதாகவும், காலையில் சூரிய உதயத்துடன் எழுந்திறுப்பவர்களுக்கு சிறந்த மன நல விளைவுகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

Read Previous

தமிழகத்தில் உயிர்த்தெழும் டெங்கு காய்ச்சல்..!! நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரம்..!!

Read Next

JEE தேர்வில் தேர்ச்சி பெற்று, பழங்குடியின மாணவிகள் சாதனை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular