கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நாகனூர் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம் மகள் கல்பனா (15). இவர் தோகைமலை அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று (ஜூன் 29) இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கல்பனா இன்று காலை அவரை பார்த்த போது வீட்டிலிருந்து மாயமானது பெற்றோருக்கு தெரியவந்தது.
இதையடுத்து கல்பனாவை அவரது பெற்றோரும் உறவினர்களும் பல இடங்களில் தேடிபார்த்தனர். இருப்பினும் அவர் எங்கு சென்றார் என தெரியவில்லை. உடனடியாக தோகைமலை காவல் நிலையத்தில் மாணிக்கம் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.