நாம் பகல் முழுக்க உழைத்து இரவில் ஓய்வு எடுப்பதற்காக தூக்கத்தை அனைவரும் கையாண்டு வருகிறோம், அப்படி தூங்கும் நேரத்தில் இதுபோன்ற உணர்வுகள் ஏற்பட்டால் அல்லது வலிகள் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகி பார்க்க வேண்டும்..
தூங்கும் போது கால்களை உதைப்பது அல்லது கால்களை அமைத்துக் கொண்டே இருப்பதும், இரவு நேரத்தில் முழங்கால் பாதங்களில் குத்துவது மற்றும் எரிச்சல் ஏற்பட்டாலோ மருத்துவரை அணுக வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர், தூக்கத்தில் இருந்து எழுந்து நடக்கும்பொழுது நடப்பதில் தடுமாற்றம் ஏற்பட்டாலும் தசைப்பிடிப்பு ஏற்பட்டாலும் பி12 குறைபாட்டின் அறிகுறியாக இருக்கும் என்றும் கூறுகின்றனர், இக்குறைபாடு மாரடைப்பு பக்கவாதம் மற்றும் நரம்பு தளர்ச்சியை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர், இரவு நேரத்தில் இது போன்ற உணர்வுகள் அல்லது வலிகள் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகி மருத்துவ ஆலோசனைப்படி மருந்துகளை உட்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர் மேலும் இந்த நோயினால் பலரும் அவதிப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்..!!