
தூது வலை இலைகள் ஊதி தள்ளும் நோய்கள்.
நுரையீரல் பலவீனமாக இருக்கும் பலருக்கு இந்த குளிர்காலத்தில் ஆஸ்துமா போன்ற மூச்சு திணறல் நோய் வந்து அவர்களை பாடாய் படுத்தி எடுக்கும்.அப்பேற்பட்ட ஆஸ்த்மா நோயாளிகளுக்கு இந்த தூது வலை மிக்க பலன் தரும்.இதை துவையலாகவோ சட்னியாகவோ செய்து சாப்பிட மூச்சு திணறல் நோய் குணமாகும்.
இந்த தூதுவளை இலைகளில் கொக்கி போன்ற முட்கள் இருக்கும். இதன் நாள் பட்ட சளி நாள் பட்ட இருமல் போன்ற கடுமையான நோய்களை குணப்படுத்த வல்லது. அதிக உஷ்ணத்தால் வரும் தொண்டைப்புண் மற்றும் தொண்டை வலி போன்ற கொடுமையான நோய்களை தீர்க்க வல்லது .மேலும் இதன் நன்மைகளை பட்டியலிட்டுளோம்.
- இந்த தூதுவளை நம் உடலில் ஒவ்வாமை ஏற்படாமல் நம்மை காக்கிறது.
- இந்த தூதுவளையில் உள்ள மலர்கள் மற்றும் இலைகள் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கும் ஆற்றல் படைத்தது இதை ரசமாக செய்து சாப்பிட்டால் நல்ல பலன் கொடுக்கும்.
- மேலும் இந்த தூதுவளை இலைகளை துவையல் செய்து வைத்து கொண்டு இந்த குளிர்காலம் முழுவதும் சாப்பிட்டால் நமக்கு புற்று நோய் உருவாகாமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது.