தூத்துக்குடி பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி கோவில் திருவிழா திடீர் நிறுத்தம்..!! காரணம் இதுவா..?

பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி கோவில் திருவிழா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி கோவிலில் 67வது திருவிழா இன்றும், நாளையும் நடைபெற இருந்தது. இந்த திருவிழாவிற்கு தூத்துக்குடி, இராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த திருவிழாவில் வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் ஊமதுரை நினைவு ஜோதி கொண்டுவரப்படுகிறது. இந்த திருவிழாவில் இரண்டு நாட்கள் மிகவும் விமர்சனியாக கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். ஏராளமான பக்தர்கள் இந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்காக அசபாவிதம் எதுவும் ஏற்படாமல் இருக்க 2000க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதனிடையே திருவிழாவில் அசபாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் இருக்க சட்டம் மற்றும் சட்ட ஒழுங்கை பாதுகாக்க நேற்று மாலை 6:00 மணி முதல் 14ஆம் தேதி காலை 6 மணி வரை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி கோவில் திருவிழா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கைத்தார் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு இடத்தில் இருந்து புறப்பட்ட ஜோதியை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். 144 தடை உத்தரவு காரணமாக ஜோதியை போலீசார் தடுத்து நிறுத்தினால் திருவிழாவுக்கு தற்காலிக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது .

Read Previous

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை மறுநாள் நடைதிறப்பு..!! ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்..!!

Read Next

உலகில் முதல் ஓட்டுனர் இல்லா பேருந்து சேவை..!! அடுத்த வாரம் தொடக்கம்..!! எந்த நாட்டில் தெரியுமா..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular