தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே தனியார் பள்ளி வாகனம் மோதி யூகேஜி மாணவி பரிதாபமாக உயிரிழப்பு..!!

  • ஆலங்குளம் அருகே தனியார் பள்ளி வாகனம் மோதி யூகேஜி மாணவி பலி!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே தனியார் பள்ளி வாகனம் மோதி யூகேஜி மாணவி பரிதாபமாக உயிரிழப்பு.தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே தனியார் பள்ளி வாகனம் மோதி யூகேஜி மாணவி பரிதாபமாக உயிர் இழந்தார்.தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள தெற்கு கம்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் தனராஜ். தொழிலாளி. இவரது ௫ வயது மகள் கவினா. இவர் ஆலங்குளம் அருகே உள்ள தனியார் பள்ளியில் யூகேஜி படித்து வந்தார்.

இந்த நிலையில் சிறுமி கவினா நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுவிட்டு மாலையில் பள்ளி வாகனத்தில் வீட்டிற்கு வந்து உள்ளார். வீட்டின் அருகே அவர் வாகனத்தில் இறங்கியபோது அதனை கவனிக்காமல் ஓட்டுநர் வாகனத்தை நகர்த்தியதாக கூறப்படுகிறது. அப்போது வானத்தில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த சிறுமி மீது பள்ளி வாகனத்தின் பின்புற சக்கரம் ஏறியது.

இதில் பலத்த காயம் அடைந்த சிறுமியை பெற்றோர் மீட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை கேட்டு உறவினர்கள் கதறி அழுதனர். தகவலின் பேரில் ஆலங்குளம் போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து பள்ளி வாகன ஓட்டுநர் ஸ்ரீகுமாரிடம் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

Read Previous

வாலிபர் கொடுத்த பாலியல் தொல்லையால் ஐந்து வயது சிறுமிக்கு கடுமையான உடல் வலி..!! வாலிபருக்கு ஆயுள் தண்டனை..!!

Read Next

கணவனின் கண் முன்னேயே கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்து விட்டதால் தான் ஆத்திரப்பட்டு ஏட்டு கூலிப்படையை ஏவி கொலை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular