
தமிழ் திரையுலகில் 40 வருடங்களுக்கு மேலாக சூப்பர் ஸ்டாராக இருந்து வருபவர் தான் நடிகர் ரஜினிகாந்த். சினிமா துறையில் இவர் அடைந்திருக்கும் உயரத்தை இன்று யாராலும் எட்ட முடியாது என்பதை நிதர்சனமான உண்மை. அந்த அளவிற்கு பாக்ஸ் ஆபிஸ் கிங் என ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த நாயகனாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவரது வளர்ச்சியில் கடைசியாக வந்த இரண்டு திரைப்படங்களான அண்ணாத்தா மற்றும் தர்பார் சிறிய சற்களை கொடுத்தது. அதனை தொடர்ந்து மீண்டும் வெற்றி படத்தை இயக்க வேண்டிய முனைப்பில் சன் பிக்சர்ஸ் உடன் இணைந்து ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து முடித்து உள்ளார் நடிகர் ரஜினிகாந்த். இந்த திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வெளியாகியிருக்கிறது.
இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் தமன்னா, மலையாள சினிமாவின் பிரபலமான மோகன்லால் கன்னட சினிமா சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் மற்றும் பாலிவுட் பிரபல நடிகரான ஜாக்கி சரஃப் ஆகியோர் இணைந்து நடித்து உள்ளனர். அனிருத் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று உள்ளது.
இப்படம் வெளியாக இருப்பதற்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் தென்னிந்திய சினிமா படங்களிலேயே கேரளாவில் அதிக திரையரங்குகளில் வெளியாகும் முதல் திரைப்படம் என்ற சாதனையைப் பெற்று உள்ளது ஜெ யிலர் திரைப்படம். மோகன்லால் மற்றும் ரஜினிகாந்தின் இணைந்து நடித்திருப்பதால் இந்த திரைப்படத்திற்கு கேரளாவிலும் அதிக அளவில் எதிர்பார்ப்பு காத்துக் கொண்டுள்ளது.