தமிழகத்தில் தென்னிந்திய நடிகர் சங்க பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ளது..
தென்னிந்தியாவில் நடிகர்களின் நடிகர் சங்க பதவிக்காலம் மேலும் 3 ஆண்டுகளும் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68 வது பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது, இந்த பொதுக்குழு கூட்டத்தில் தென்னிந்திய நடிகர் சங்க பதிக்காலம் நீடிப்பு குறித்து பேச்சுவார்த்தை மற்றும் இதற்கான அறிவிப்பும் நீடிக்கப்பட்டுள்ளது, மேலும் தென்னிந்திய சங்க நிர்வாகிகளின் பதவி காலம் நீடிப்பு தீர்மானம் நிறைவேறப்பட்டுள்ளது, தேர்தல் பணிகள் தொடர்ந்தால் நடிகர் சங்க கழகத்தின் தேவையற்ற பிரச்சனைகள் மற்றும் மன உளைச்சல்கள் ஏற்படும் என்றும் அதனை குறைப்பதற்காகவும் அவற்றை கைவிடுவதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நடிகர் சங்க குழுக்கள் தெரிவித்துள்ளது, மேலும் நடிகர் சங்க நிர்வாகிகளின் ஒற்றுமை கலந்த சிந்தனை கொண்டு எடுத்த ஒரு முடிவாக இதனை அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் இதனால் நடிகர் சங்கத்தில் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்க முடியும் என்றும் நடிகர் சங்க நிர்வாகிகள் பலரும் தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்தன்மையோடு கூறி வந்தனர்..!!




