
பொதுவாக கர்ப்பிணி பெண்கள் தங்களுக்கும் தங்கள் வயிற்றில் வளரக்கூடிய குழந்தையின் நலனைக்காக எந்த வகை உணவுகளை சேர்க்கலாம் எந்த உணவு முறைகளை சரியான அளவு எடுத்துக் கொள்ளலாம் அதேபோல் எந்த வகை உணவுகளை எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதை பற்றி காண்போம்…
பெண்களின் கர்ப்ப காலத்தில் எப்படிப்பட்ட உணவுகளை உண்ண வேண்டும் என்பதில் பெரும் சந்தேகம் இருந்து வருகிறது, அந்த கர்ப்பிணி பெண்கள் எந்த உணவு வகைகளை உணவில் சேர்ப்பது எந்த உணவுகளை தவிர்ப்பது என்று தெரியாமல் பிறரிடம் ஆலோசனை கேட்பது வழக்கமாகிற்று, பின்வரும் உணவு முறைகளை கர்ப்பிணி பெண்கள் உட்கொண்டால் வயிற்றில் வளரக்கூடிய கரு வளமாக வளரும், முதலில் கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் தவிர்க்கப்பட வேண்டிய உணவு முறைகளில் வெள்ளை அரிசி, வெள்ளை ரொட்டி, மற்றும் தின்பண்டங்கள் இவற்றை ஒதுக்கி விட வேண்டும், கர்ப்பிணி பெண்கள் உலர்ந்த பழங்களை சாப்பிடுவதனால் மலச்சிக்கலை தவிர்க்க முடியும், இரும்புச்சத்து அதிகரிக்கும் குழந்தையின் நரம்பு மற்றும் மூளை வளர்ச்சி ஆரோக்கியம் அடையும், மேலும் கீரை வகைகள் காய்கறிகள் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான ஹீமோகுளோபின் அதிகரித்து உடல் ஆரோக்கியமாகவும் பிரசவ காலங்களில் தேவையான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும் என்று மகப்பேறு மருத்துவர்கள் கூறுகின்றனர்..!!