தெருநாய்கடியால் ரேபிஸ் தொற்று பரவும் அபாயம்; கேரளாவில் அதிர்ச்சி.. பெற்றோர்கள் பீதி.!!

கேரள மாநிலத்தில் தெருநாய்கள் கடியில் சிக்கிய குழந்தைகள் பலருக்கும் ரேபிஸ் தொற்று இருப்பதாக  அறிவுறுத்தப்பட்ட நிலையில் பெற்றோர்கள் பலரும் தங்கள் குழந்தைகளை எண்ணி அச்சமடைந்து உள்ளனர்.

கேரள மாநிலதில் உள்ள திருவனந்தபுரம், திருச்சூர், கொல்லம், கோட்டயம் மாவட்டத்தில் தெரு நாய்களின் தொல்லை அதிக அளவில் அதிகரித்து உள்ளது. இதனால் நாள் ஒன்றுக்கு பலரும் தெருநாய் கடிபடும் சம்பவம் தொடர் கதை ஆகி வருகின்றது.அம் மாநிலத்தில் ஒரு மாதத்திற்கு சராசரியாக 25,000 பேர் தெருநாய்களால் கடிக்கப்பட்டு பாதிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றன. கடந்த ஆறு மாதங்களில் மட்டும் மொத்தமாக 1 லட்சத்து 67 ஆயிரத்து 437 பேர் தெரு நாய் கடியால் பாதிக்கப்பட்டதாக தகவல் உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில் திருவனந்தபுரத்தில் குழந்தைகளை கடித்த நாய்களுக்கு ரேபிஸ் தொற்று இருப்பதும் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதனால் அவர்கள் ரேபிஸ் மருந்து எடுக்கவும் அறிவுறுத்தப்பட்ட நிலையில் பெற்றோர்கள் தங்கள் அறியா பிள்ளைகளை எண்ணி அச்சமடைந்து உள்ளனர். பெரும்பாலும் குழந்தைகளை தெரு நாய்க் கடியில் சிக்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Previous

பள்ளி மாணவர்கள் மதிய உணவில் இறந்து கிடந்த பள்ளி; 93 பேர் மருத்துவமனையில் அனுமதி.!!

Read Next

காவு வாங்கிய டிரெட்மில்., 24 வயது இளைஞர் பலி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular