தற்சமயம் பரவலாக ஆங்காங்கே நாய்கள் துரத்துவதும் நாய்கள் கடிப்பதும் வழக்கமாகிவிட்டது, நாயிடமிருந்து நம்மை பாதுகாக்க சிலவற்றை செய்யலாம்..
தற்போது நாய்கள் அதிகம் உள்ள நிலையில் தெருவோரங்களில் குழந்தைகள் தனியாக சென்றால் அவர்களை துரத்துவதும் கடிப்பதும் சில குழந்தைகள் நாய் கடித்து உயிரிழந்த சம்பவங்கள் கூட செய்திகளாக வெளிவருகிறது, அப்படி இருக்கும் பட்சத்தில் நாய்கள் உள்ளுணர்வின் அடிப்படையில் செயல்படுகிறது, பயப்படும் நபர்களை நாய் தாக்குவதற்கு முயற்சி செய்கிறது, நாய் குறைக்கும் போது ஓடாமல் நின்றாலே அருகில் வந்து குறைத்துவிட்டு ஒதுங்கிவிடும், நாய்களின் கண்ணை நேருக்கு நேர் பார்க்க கூடாது அது சண்டைக்கு அழைப்பதற்கான அறிகுறியாகும், கீழே கல் அல்லது ஏதாவது பொருளை எடுத்து அடித்து விடுவது போல் பாவனை காட்டினாலே நாய் ஓடிவிடும் இவற்றை செய்தாலே நாயிடம் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ளலாம்..!!