
மும்பையைச் சேர்ந்த பொறியாளர் அக்ஷய் ரிட்லான், நாய்களுக்கு ஆதார் அட்டை வழங்கும் புதுமையான திட்டத்தை கொண்டு வந்துள்ளார். ‘pawfriend.in‘ என்ற தொண்டு நிறுவனத்தின் உதவியுடன், தெருநாய்கள் சிலவற்றிற்கு ஆதார் அட்டைகளை உருவாக்கி, அவற்றின் கழுத்தில் அடையாள அட்டையை மாட்டி வருகிறார்கள். இந்த அடையாள அட்டையில் QR குறியீடும் உள்ளது. அந்த நாயைப் பற்றிய முழு விவரங்களை அறிவதற்கு இந்த QR-ஐ ஸ்கேன் செய்து கொள்ளலாம். மேலும் தெருநாய்கள் தொலைந்து போனால், அந்த QR குறியீட்டை ஸ்கேன் செய்து கண்டுபிடித்து கொள்ளலாம்.