
தெலங்கானா மாநிலம் வாரங்கல் மற்றும் கம்மம் மாவட்டங்களில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 9 பேரை காணவில்லை, அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முலுகு மாவட்டத்தில் 8 பேரும், ஹனுமகொண்டா மாவட்டத்தில் 3 பேரும், மஹபூபாபாத் மாவட்டத்தில் 2 பேரும், பூபாலபள்ளி மாவட்டத்தில் ஒருவரும், கூட்டு கம்மம் மாவட்டத்தில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தால் மின்துறைக்கு ரூ.7 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.