
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மந்தமாரியில் அங்காடி பகுதி சார்ந்த கோமுராஜூலா ராமுலு என்பவரின் குடும்பத்தினர் செம்மறி ஆடுகள் வளர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் இவர்களது ஆடுகளை கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை பல இடங்களில் ஆடுகளை தேடியும் ஆடுகள் கிடைக்கவில்லை. இதனால் கோமுராஜூலா ராமலுக்கு அப்பகுதியை சார்ந்த இரண்டு இளைஞர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதன்படி பட்டியலினத்தை சார்ந்த தேஜா, கிரண் உள்ளிட்ட இரண்டு பேரை அழைத்து வந்து ஆட்டுக் கொட்டகையில் அடைத்து அவர்களை தலைகீழாக தொங்கவிட்டு தலைக்கு அடியில் தீ வைத்துள்ளனர்.
பின் அவர்கள் இருவரையும் பல மணி நேரமாக கொடூரமாய் தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக இளைஞரின் குடும்பத்தினர் காவல் துறையில் புகார் அளித்தனர், அந்த புகாரியின் அடிப்படையில் காவல் துறையினர் ஒரே குடும்பத்தை சார்ந்த மூன்று பேர் மீது எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இதை தொடர்ந்து காவல் துறையினர் இளைஞர்களை கட்டி வைத்து கொடூரமாக தாக்குதல் நடத்திய மூன்று பேரையும் கைது செய்தனர். பட்டியலின இளைஞர்கள் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.