தேங்காயின் ஆரோக்கிய நலன்கள் என்னென்ன தெரியுமா..??

Oplus_131072

 

இளநீர், தேங்காய், தேங்காய் பால் போன்றவற்றை நாம் அடிக்கடி பருக முடிந்தாலும், தேங்காய்ப்பூ என்பது அரிதாக கிடைக்கும் ஒன்று தான்.

ஏனென்றால் தேங்காய் பூ..! கிடைக்க, முற்றிய தேங்காயை மண்ணில் புதைத்து வைக்க வேண்டும். பின்னர் 20 நாட்களுக்கு பின்னரே, கீழே இரண்டாவதாக குறிப்பிட்ட புகைப்படத்தில் உள்ளது போல தேங்காய் குருத்து வளர ஆரம்பிக்கும். அந்த பக்குவத்தில் தேங்காயை உடைத்தால் தேங்காய் பூ கிடைக்கும்.

இதுபோல் நன்கு முற்றிய தேங்காய் கன்றில் இருக்கும் வளர்ந்த கரு தான் தேங்காய்ப்பூ…

இது நிறைய நன்மைகளை கொண்டது…

தாயின் தாய்ப்பாலில் மட்டுமே உள்ள சில சத்துக்கள் இளநீரில் தான் உள்ளது என்கிறார்கள்‌.

அப்படிப்பட்ட இளநீர் கருவாக வளர்ச்சி பெருகையில் அதிக அதிகப்படியான சத்துப்பொருட்கள் நிறைத்து இருக்கிறது.

தேங்காய் பூவில் நீர்சத்து அதிகம் உள்ளதோடு மட்டுமல்லாமல், அது இன்சுலின் சுரப்பியின் செயல்பாட்டை தூண்டுவதால் நீரிழிவு நோயும் குணமடையும் என்கிறார்கள்.

குறிப்பு: இது அளவாக , அதாவது ஒரு தனிநபர் அதிகபட்சம் ஒரு முழு தேங்காய் பூவை மட்டுமே சாப்பிடுவது நல்லது. அதற்கு அதிகமாக சாப்பிடாதீர்கள். அளவுக்கு அதிகமாக உண்டால் அது பல உடல் உபாதைகளையும் ஏற்படுத்த வல்லது.

ஆக, இயற்கை கொடுக்கும் அத்தனையும் நமக்கு ஏதாவது ஒரு வகையில் நன்மை தருவதால், சும்மா இருக்கும் சமயத்தில் அல்லது சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் தேங்காய் கன்றுகளை தேடுங்கள், இளம் வயதில் நாம் அனுபவித்த சிலவற்றை மீண்டும் நம் குழந்தைகளுக்கு கிடைக்க செய்து மகிழ்வோம்.

Read Previous

கருப்பு( அருமையான சிறுகதை)..!! படித்ததில் கண்ணீரை வர வைத்த பதிவு..!!

Read Next

வயிற்றில் உள்ள கிருமிகளை போக்கும் வேப்பம் பூ..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular