தமிழகத்தில் தேசிய திறனறிவு தேர்வு அனைத்து பள்ளிகளுக்கும் அழைப்பு..
இளம் விஞ்ஞானிகளை கண்டறியும் தேசிய அறிவியல் திறனறிவு தேர்வில் பங்கேற்க பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது, அறிவியல் மற்றும் ஆராய்ச்சி துறையில் மாணவர்களின் ஈர்ப்பு மற்றும் கவனத்தை அதிகரிக்க ஒவ்வொரு வருடமும் இத்தேர்வு இந்தியா முழுவதும் நடத்தப்படும், வருகிற அக்டோபர் 23 மற்றும் அக்டோபர் 27 ஆகிய தினங்களில் இத்தேர்வு நடக்க இருக்கிறதாக இந்திய விஞ்ஞானிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது, மேலும் இத்தேர்வில் விண்ணப்பிக்க WWW.VVM.org.in என்ற இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்து தகுந்த ஆதாரங்களை சமர்ப்பித்து தேசிய அறிவியல் திறனாய்வு தேர்வில் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது, மேலும் இளைய விஞ்ஞானிகளை உருவாக்குவதற்கான இத்தேர்வை பள்ளி மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இதன் மூலம் வருங்காலத்தில் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி துறையில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்பு கேட்டும் என்றும் கூறியுள்ளது..!!