தேசிய நெடுஞ்சாலையை கடந்தபோது சோகம்..!! முதியவர் கார் மோதி பரிதாப பலி.!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை, கஞ்சநாயக்கன்பட்டி கிராமம், தெற்கு தெருவில் வசித்து வருபவர் பாலகிருஷ்ணன் (வயது 82) நேற்று தனது சொந்த வேலை காரணமாக வெளியே சென்றுள்ளார், பின் தனது வீட்டிற்கு திரும்பி வந்தார்.

முதியவர் பாலகிருஷ்ணன் மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையை கடந்து வந்து கொண்டிருந்தபோது அதன் வழியே வந்த கார் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பாலகிருஷ்ணன் படுகாயம் அடைந்துள்ளார். இதனை தொடர்ந்து உடனடியாக முதியவரை மீட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனுழ்.

அங்கு பாலகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாய் உயிர் இழந்துள்ளார், இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் பாலகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுனர் கபாலீஸ்வரர் என்பவரின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் ,சித்தம்பலம் பகுதியை சார்ந்தவர் என தெரியவந்துள்ளது. சம்பவ தினத்தன்று தூத்துக்குடியில் இருந்து மதுரை வந்தபோது முதியவரின் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

Read Previous

திருமணமாகாத விரக்தி; 29 வயது இளைஞர் மதுவில் விஷம்கலந்துகுடித்து தற்கொலை..!! விருதுநகரில் சோகம்..!!

Read Next

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து..!! “காரணம் இதுவே” – அமைச்சர் பரபரப்பு பேட்டி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular