தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் டிகிரி தேர்ச்சி முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்க தவறாதீர்கள்..!!

Principal DPR Expert, Senior Highway Expert, Road Safety Expert மற்றும் பல்வேறு பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 38 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

NHAI காலிப்பணியிடங்கள்:

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Principal DPR Expert, Senior Highway Expert, Road Safety Expert மற்றும் பல்வேறு பணிக்கென 38 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

பணியின் அடிப்படையில் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree / Civil Engineer/Environmental Engineer என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Level 13/14 ஊதியத்தில் அரசு அதிகாரியாக பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

NHAI வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 65 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.6 லட்சம் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NHAI தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 18.07.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

மேலும் விவரங்களுக்கு:

https://nhai.gov.in/nhai/sites/default/files/vacancy_files/DPR_Expert_Recruitment_notice_Revised.pdf

 

Read Previous

பலவித நோய்களை குணப்படுத்தும் பொன்னாங்கண்ணி..!! அடிக்கடி சாப்பிடுங்க..!!

Read Next

சம்பளமே வேண்டாம்.. பாதி காசு வாங்காமலேயே நடித்த அமலா.. புகழ்ந்து பேசிய பிரபலம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular