தேனில் இவ்வளவு ஆரோக்கிய பயன்கள் இருக்கிறதா.. அதைப்பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
1. எலுமிச்சம் பழம் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் குறையும்.
2. தேங்காய் பாலுடன் தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண் வாய்ப்புண் குணமாகும்.
3. இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் பித்தம் தீரும்.
4. மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்தம் ஊறும்.
5. பலச்சாருடன் தேன் கலந்து சாப்பிட்டால் சக்தி கிடைக்கும்.
6. இரவில் தேன் கலந்து சாப்பிட்டால் இதயம் வலிமை பெறும்.
7. சுண்ணாம்பில் தேன் கலந்து கட்டிகள் உள்ள இடத்தில் தடவ வீக்கம் குறையும் கட்டிகளும் ஆறிவிடும்.




