
தேனை எதனுடன் சேர்த்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்..?? கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்..!!
தேனில் உள்ள ஆரோக்கியம் ஏராளம். இந்நிலையில் பாலில் தேனை கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும் என்று அனைவரும் சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம். அந்த வகையில் தேனை எதனுடன் சேர்த்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
பாலுடன் தேன் சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும். எலுமிச்சை பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் புது ரத்தம் உண்டாகும். ரோஜாப்பூ குல்கந்தில் தேன் கலந்து சாப்பிட்டால் உடல் சூடு தணிந்து உடலில் மாற்றங்கள் நிகழும். ஆரஞ்சு பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும். தேங்காய் பாலுடன் தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண் மற்றும் வாய்ப்புண்கள் ஆறும். கேரட்டுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்த சோகை போகும். இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் பித்தம் தீரும்.