நமது பற்களின் ஆரோக்கியத்திற்கு பல் துலக்குதல் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். பல் துவக்குவதால் வாய் துர்நாற்றம் ,கிருமிகள் மற்றும் பல் இடுக்குகளில் சிக்கி உள்ள உணவு துணுக்குகள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு பற்களின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது.
அதுபோல் ஒரு நாளைக்கு காலை ,இரவு இரண்டு முறை பல் துலக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதேசமயம் நமது பற்களின் ஆரோக்கியம் பேணும் ப்ரஷ்களை அது தேய்ந்து போகும் வரை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அது தவறான செயல். எவ்வளவு விலை உயர்ந்த டூத் பிரஸ் ஆக இருந்தாலும் அதை மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை கண்டிப்பாக மாற்றம் செய்ய வேண்டும்.
இதே போல் சளி, இருமல், காய்ச்சல் அல்லது வாயில் ஏதேனும் தொற்று ஏற்பட்டவர்கள் உடனடியாக அவர்கள் ப்ரஷ் மாற்றம் செய்ய வேண்டும், ப்ரஷில் ஒட்டிக்கொண்டு உள்ள கிருமிகள் பற்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் உங்களது உடல் நிலையை மோசமடைய செய்யும்.
மேலும் ஒரு குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஒரே இடத்தில் ஒட்டுமொத்தமாக ப்ரஷ் வைக்கக் கூடாது. ஏனென்றால் ஒருவருக்கு ஏதேனும் வாய் தொற்று இருந்தாலும் அது டூத் பிரசின் மூலம் மற்றவருக்கும் பரவி அது பாதிப்பை ஏற்படுத்திவிடும். எனவே இந்த முறைகளை பயன்படுத்தி பற்களை ஆரோக்கியத்துடன் வைத்திருப்போம்.