பட்ஜெட்டில் புறக்கணித்தவர்களை தேர்தலில் புறக்கணிப்போம் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் திமுக சார்பில் ‘தமிழ்நாடு தலை குனியாது’ பொதுக்கூட்டம் இன்று (பிப்., 04) நடைபெற்றது. இதில் பேசிய அமைச்சர், ‘ஒன்றிய பாஜக அரசின் பட்ஜெட்டில் திருக்குறளும் இல்லை, தமிழ்நாட்டிற்கு நிதியும் இல்லை. இது மிகப்பெரிய ஏமாற்றம். தமிழ்நாட்டில் நடைபெறுவது வெறும் ஆட்சி அல்ல ஏழைகளின் அரண், தமிழர்களின் அடையாளம்’ என்றார்.




