தேர்தல் பற்றி மட்டுமே உங்களுக்கு அக்கறை உள்ளது..!! பாஜக அரசை விமர்சித்த மம்தா பானர்ஜி..!!

மேற்குவங்க மாநிலத்தின் முதலமைச்சரான மம்தா பானர்ஜி தற்பொழுது மேற்கு வங்காளத்தில் ஏற்பட்ட ரயில் விபத்திற்கு பாஜக அரசு முழு பொறுப்பு என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர்களுக்கு தேர்தல் பற்றிய மட்டுமே அக்கறை உள்ளது எனவும் குற்றம் சாட்டி உள்ளார்.

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள டார்ஜிலிங் மாவட்டத்தில் நின்று கொண்டிருந்த பயணியர் ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இதுவரை 9 பேர் பரிதாபாய் உயிரிழந்துள்ளனர். மேலும் 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த ரயில் விபத்து மோடி அரசின் அலட்சியத்தை காட்டுகிறது என்றும் காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்து வருகின்றது.

இந்நிலையில்  ரயில் விபத்து ஏற்பட்ட பகுதிக்கு வருகை தந்த மேற்குவங்க மாநிலத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி மீட்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டுள்ளார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மம்தா பானர்ஜி “ரயில் பயணிகள் குறித்து மத்திய அரசுக்கு எந்த ஒரு அக்கறையும் இல்லை, ரயில்வே அதிகாரிகள், பொறியாளர்கள், தொழிலாளர்கள் மீது கூட எந்த ஒரு அக்கறையும் இல்லை, தேர்தல் பற்றி மட்டுமே பாஜக அரசுக்கு அக்கறை உள்ளது. தேர்தலில் எப்படி சூழ்ச்சி செய்வது உள்ளிட்டவை தொடர்பாக மட்டுமே பாஜக அரசு செயல்பட்டு வருகிறது”, என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

Read Previous

அமித்ஷாவை சந்தித்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்..!! காரணம் இதுவா..?

Read Next

மெஸ் சாப்பாடு சாப்பிட்ட கல்லூரி மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் விசாரணையில் வெளிவந்த பாம்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular