தேர்வு முடிவை தெரிந்துகொள்ளாமலேயே விபத்தில் சிக்கி உயிரிழந்த மாணவர்..!! சென்னையில் சோகம்.!!

தேர்வு எழுதிய மாணவன் தனது மதிப்பெண்ணை தெரிந்து கொள்ளும் முன்பே விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள மதுரவாயல் பகுதியை சார்ந்தவர் ஜீவா. இவர் மதுரவாயல் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிற்று வந்தாழ். இன்று தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து தனது நண்பர்களுடன் இரு சக்கர வாகனத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள சென்றார்.

இருசக்கர வாகனத்தில் மதுரவாயல் பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது பாலத்தின் கீழே லாரி ஒன்றை இவரின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டள்ளது. இந்த விபத்தில் மாணவர் ஜீவா சம்பவ இடத்திலேயே பரிதாபமாய் உயிர் இழந்துள்ளார். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் அங்கிருந்து வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி சென்றுள்ளார்.

விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்க அனுப்பி வைத்தள்ளனர்.மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர். இதில் அதிகாரிகளின் முதல் கட்ட விசாரணையில் தனது மதிப்பெண்ணை அறிந்து கொள்ள சென்றபோது விபத்தில் சிக்கி மரணம் அடைந்த சோக சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளது.

Read Previous

குடும்ப சண்டையில் கொடூரம்; மாமியாரை சரமாரியாக வெட்டிக்கொன்ற மருமகன்..!! மனைவியின் உயிர் ஊசல்.!! திண்டுக்கல்லில் சோகம்.!!

Read Next

தந்தை இறந்த துக்கத்திலும் தேர்வெழுதி சாதனை படைத்த மாணவர்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular