
தேள் கடித்து விட்டதா..?? அப்போ உடனே இதை எல்லாம் மறக்காம பண்ணுங்க..!!
மனிதர்கள் வாழும் அதே பகுதிகளில் தான் பாம்பு பூரான் தேள் போன்ற விஷமுள்ள ஜந்துக்களும் வாழ்கிறது. குறிப்பாக கிராமப்புறங்களில் வயல்வெளிகளில் இந்த விஷ ஜந்துக்கள் அதிகம் காணப்படும். அவைகளிடமிருந்து நாம் எப்பொழுதும் தள்ளியே இருப்பது நமக்கும் நம் உயிருக்கும் நம் உடலுக்கும் மிகவும் நல்லது. இந்த நிலையில் ஒரு சில சமயங்களில் எதிர்பாராத விதமாக அந்த விஷ ஜந்துக்கள் நம்மை கடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. அவ்வாறு தேள் கடித்துவிட்டால் நம் உடனே என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
தேள் கடித்து விட்டால் உடனே வெங்காயத்தை பிழிந்து சாறு எடுத்து அதில் சிறிது பெருங்காயத்தை போட்டு நன்றாக கலந்து தேள் கொட்டிய இடத்தில் பற்று போட்டால் உடனே தேள் கடி மற்றும் அதன் விஷம் இறங்கிவிடும். இல்லையென்றால் வெங்காயத்தைப் பிழிந்த சாறு எடுத்து அதில் கொஞ்சம் துணி துவைக்கும் சோப்பும், மருதாணி இலையும் சேர்த்து அரைத்து எந்த இடத்தில் கடித்ததோ அதில் பூசி வந்தால் சரியாகிவிடும். பின்பு மருத்துவரை சந்திப்பது மிகவும் நல்லது.