• September 11, 2024

தேவையற்ற கொழுப்புக்களை கரைத்து தொப்பையை போக்கும் மருத்துவ குறிப்புகள்..!!

தினமும் 1-2 பற்கள் பூண்டை பச்சையாக உட்கொண்டு, 1 டம்ளர் வெதுவெதுப்பான நீரை குடிக்கவும்.

காலையில் எழுந்ததும் செய்து வர தொப்பை மட்டுமின்றி, நீரிழிவு தடுக்கப்படும், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், தேவையற்ற கொழுப்புக்கள் கரையும்.

ஆப்பிளை நறுக்கி துண்டுகளாக்கி, அத்துடன் பட்டைத் தூளை தூவி தினமும் பசிக்கும் போது உட்கொண்டு வர, பசி அடங்குவதோடு, உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து அதிகப்படியான கலோரிகளும் எரிக்கப்படும்.

2 லிட்டர் சுடுநீரில் 1 எலுமிச்சையை பிழிந்து, 1/2 கப் புதினாவை நறுக்கிப் போட்டு, ஒன்றாக கலந்து இரவு முழுவதும் ஊற வைத்து, தினமும் உணவு உட்கொள்வதற்கு 10 நிமிடத்திற்கு முன் 1 கப் குடித்து வர வேண்டும். இதனால் குறைவான அளவில் உணவை உட்கொள்ளலாம், செரிமானம் மேம்படும் மற்றும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் குறைந்து தொப்பையும் குறையும்.

கபல்பதி பிராணயாமம்: தினமும் காலையிலும், மாலையிலும் வெறும் வயிற்றில் 5 நிமிடம் கபல்பதி பிராணயாமம் செய்து வருவதன் மூலமும் தொப்பையைக் குறைக்கலாம். அதற்கு படத்தில் காட்டியவாறு மூச்சை வெளிவிடும் போது வயிற்றை உள்ளும், மூச்சை வெளிவிடும் போது வயிற்றை வெளியேயும் தள்ள வேண்டும்.

2 டேபிள் ஸ்புன் கடுகு எண்ணெய்யுடன், 2 டேபிள் ஸ்புன் நல்லெண்ணெய் மற்றும் 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, வெதுவெதுப்பாக சுடேற்றி, தொப்பையை தினமும் 3 நிமிடம் மசாஜ் செய்து வர வேண்டும். இதனால் வயிற்றில் உள்ள கொழுப்புச் செல்கள் கரைக்கப்பட்டு, தொப்பை வேகமாக குறையும்.

Read Previous

கணவன் மனைவி சென்ற டூவீலர் மீது கார் மோதி விபத்து..!! பலத்த காயம்..!!

Read Next

Cucumber Chutney: வெள்ளரிக்காய் சட்னி செய்ய தெரியுமா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular