தைப்பூச விரதம் தொடங்கிய முருக பக்தர்கள் : 48 நாட்கள் விரதம் இருப்பது வழக்கம்..!!

தமிழ்நாட்டில் பெரும்பாலான முருக பக்தர்கள் தைப்பூசத்திற்கு முன்பு 48 நாட்கள் விரதம் இருப்பது வழக்கம்…

முருக பெருமானுக்கான மிக உகந்த விரத நாட்களில் ஒன்று தைப்பூசம் தை மாதத்தில் வரும் பௌர்ணமி திதியும் பூசம் நட்சத்திரமும் இணைந்து வரும் நாளைய தைப்பூச நாளாக கொண்டாடப்படுகிறோம். முருகப்பெருமான் ஞானப்பழத்தை பெற முடியவில்லை என தாய் தந்தையிடம் கோபம் கொண்டு பழனி மலையில் ஆண்டிக் கோலம் கொண்டு அமர்ந்த தினம் தான் தைப்பூசம்..

முருக பக்தர்களால் விசேஷமாக கொண்டாடப்படும் தனிப்பெரும் விழாவாக தைப்பூசம் உள்ளது தமிழ்நாட்டில் பெரும்பாலான முருக பக்தர்கள் தைப்பூசத்திற்கு முன்பு 48 நாட்கள் ஒரு மண்டலம் விருதம் இருப்பது வழக்கம்..

செல்வ செழிப்பு பெருக துன்பங்கள் விலக கடன் பிரச்சினைகளில் இருந்து விடுபட முருகப் பெருமானை மனதார வேண்டிக் கொண்டு இந்த 48 நாட்கள் விரதம் இருப்பார்கள்..

2025 ஆம் ஆண்டுக்கான தைப்பூச பிப்ரவரி 11ஆம் தேதி வருகிறது எனவே தைப்பூச கிரகம் இருக்க விரும்ப அவர்கள் வியாழக்கிழமை முதல் தைப்பூச தினமான பிப்ரவரி 11ஆம் தேதி வரை மொத்தம் 42 நாட்கள் இந்த விரதத்தை கடைபிடிக்க வேண்டும் தமிழகத்தில் பலர் நேற்று இந்த விரதத்தை மாலை அணிந்து தொடங்கி விட்டனர்..

தைப்பூச விருதம் இருப்பவர்கள் தினமும் காலையில் எழுந்து அருகில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று தங்களின் கோரிக்கையை சொல்லி மனதார வேண்டிக் கொள்ள வேண்டும் பிறகு வீட்டிற்கு வந்து பூஜை அறையில் விளக்கேற்றி வைத்து முருகனுக்கு ஏதாவது இனிப்பு நைவேத்தியம் செய்து வலி வர வேண்டும். நெய்வேத்தியம் ஏதும் செய்ய முடியாதவர்கள் எளிமையான வெற்றிலை பாக்கு ஒரு வாழைப்பழம் வைத்து அல்லது சிறிது கற்கண்டு வைத்து வழிபடலாம்..!!

Read Previous

அடேங்கப்பா தினமும் சூரியகாந்தி விதை சாப்பிடுவது இம்முட்ட நல்லதா இது தெரியாம இருக்கே..!!

Read Next

நம் அனைவரின் வாழ்விலும் இப்படி ஒருவர் கண்டிப்பாக இருந்தால் வாழ்க்கை வசந்தமாகும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular