
தை அமாவாசை தினத்தை முன்னிட்டு நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். அதன்படி மதுரை வைகை ஆற்றின் கரை பகுதியில் குவிந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது மறைந்த முன்னோர்களுக்கு பூ, பழம், தேங்காய் உள்ளிட்ட பொருள்களை வைத்து தர்ப்பணம் கொடுத்து, அதனை நீர் நிலைகளில் விட்டு சென்றனர். இதனால் வைகை ஆற்றின் கரையில் பெரும் மக்கள் கூட்டம் காணப்பட்டது. மேலும், அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.