“தை பிறந்தால் வழி பிறக்கும் ..!”
தை மாதம் பிறந்தால், வயலில் அறுவடை ஆகும். உழவர்கள் கையில் செல்வம் புரளும், வாழ்க்கை செழிக்கும் என்பது நாம் நேரடியாக புரிந்துகொள்ளும் பொருள்.
அதுவும் சரியான பொருள் தான். இந்தப் பழமொழிக்கு மேலும் சில அர்த்தங்களும் உண்டு.
வயற்காட்டில் விளைந்திருக்கும் நெல்மணிகள், முழு வளர்ச்சி அடையும் போது, அவை வரப்புகளில் சாய்ந்து கிடக்கும். அப்போது வரப்புகளில் நடப்பதற்கு வழி இருக்காது. தை மாதம் அறுவடையான பின், மீண்டும் வரப்புகளில் நடப்பதற்கு பாதை கிடைக்கும். இதையும் குறிப்பிடுவது தான் இந்தப் பழமொழி.




