
தை மாத பௌர்ணமியன்று சில பொருட்களை தானமாக அளிப்பது என்பது மிகுந்த சிறப்பை தரும். எள், வெல்லம், போர்வை, மண்பாண்டப் பொருட்கள், உணவு ஆகியவற்றை தானமாக அளிக்கலாம். இது உங்களுக்கு புண்ணியங்களையும், அளவில்லாத நன்மைகளையும் பெற்றுத் தரும். இதில் மிக உயர்வானது அன்னதானம். அன்னதானம் அளிப்பது உயர்ந்த பலன்களைத் தரும். பௌர்ணமி தினத்தில் ஏழைகளுக்கு வயிறார உணவளிப்பது என்பது ஆசீர்வாதத்தையும், நிறைவான வாழ்க்கையையும் உங்களுக்கு அளிக்கும்.