ஆண் பெண் இருவருக்கும் அழகினை மிகைப்படுத்தி தருவது அவர்களின் கூந்தல்தான். அதிலும் பெண்கள் என்றால் அவர்களுக்கு அழகை கொடுப்பது கருகருப்பான கூந்தல்தான். அதை பராமரிக்க வேதிப்பொருட்கள் கலந்த பல்வேறு ரசாயனங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பலருக்கும் முடி உதிர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றது இதனை இயற்கை முறையில் கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்து இப்பதிவினை தெளிவாக காண்போம்.
முடி வளர்ச்சிக்காக ஆரோக்கியமான உணவினை எடுத்துக் கொள்வதுடன் நிம்மதியான தூக்கமும் முக்கியமான ஒன்று. மன உளைச்சல் இல்லாமல் இருப்பதும் தேவையில்லாமல் கெமிக்கல் கலந்த பொருட்களை தலைமுடிக்கு பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.
முடி உதிர்வை தடுத்து முடி வளர்ச்சியை அதிகரிக்க இந்த ஒரு எண்ணையை பயன்படுத்தினால் போதும் முடி வளர்ச்சி அதிகரிக்க ஒரு முக்கிய மூலிகையாக கேசவர்த்தினி உள்ளது. கேசவர்த்தினி இலையை நர்சரியில்வாங்கி வீட்டில் வளர்த்து எண்ணெய் தயாரித்து பயன்படுத்து கொள்ளலாம். இந்த செடி கிடைக்கவில்லை என்றால் நாட்டு மருந்து கடைகளில் கேசவர்த்தினி பொடி கிடைக்கும் அதனை வாங்கி பயன்படுத்தலாம்.
எண்ணெய் தயாரிக்க சுத்தமான தேங்காய் எண்ணெய் தேவை .அதில் சிறிதளவு வேம்பாலம் பட்டை சேர்த்து ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் கேசவர்த்தினி இலையை பறித்து அதனை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து வேம்பாலம் பட்டை எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் காய்ச்சி பின்னால் அதில் கேசவத்தின் இலையை சேர்த்து விட வேண்டும்.
இரவு முழுவதும் எண்ணெயில் கேசவர்த்தினி இலை நன்கு ஊறிய பின்பு காலையில் அந்த எண்ணெயை வடிகட்டி பயன்படுத்திக்கொள்ளலாம். அதிகமாக தீயில் வைத்து எண்ணெயை சூடு படுத்தி கேசவர்தனின் இலை கருக விடக்கூடாது. எப்பொழுது சூடு படுத்தினாலும் மிதமான தீயில் காய வைக்க வேண்டும். வடிகட்டிய எண்ணையை துங்குவதற்கு முன்பு தலையில் தேய்த்து மசாஜ் செய்துவிட்டு மறுநாள் காலை சீயக்காய் அல்லது ஷம்பு பயன்படுத்தி தலை முடியை அலசி விடுங்கள்.
பகல் நேரத்தில் அரை மணி நேரம் எண்ணெய் தேய்த்து ஊற வைத்து பின்னர் தலைமுடியை அலசி கொள்ளலாம், இதனை வாரத்திற்கு மூன்று முறை பயன்படுத்தி வந்தால் முடி உதிர்வு பிரச்சனை குணமடையும். மேலும் சரியாக முடி வளர ஆரம்பிக்கும். கேசவர்த்தினி இலையில் முடி வளர்ச்சியை தூண்டும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.