தொடர்ந்து வசூலை குவிக்கும் அமரன் திரைப்படம்…!!

சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படம் உலக அளவில் ரூபாய் 150 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது..

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து தீபாவளி பண்டிகையில் வெளியான படம் அமரன் ராஜ்கமல் பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்த நிலையில் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார் மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தனின் வாழ்க்கையை தழுவி இப்படம் உருவாகியுள்ளது இதில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும் முகுந்தனின் மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவியும் நடித்துள்ளார், உலகளவில் சுமார் 900-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது இப்படம் தொடர்ந்து பல்வேறு பிரபலங்களின் பாராட்டுகளை இப்படம் பெற்று வருகிறது படத்தில் இடம்பெற்ற சண்டை மற்றும் காதல் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்துள்ளன, இந்த நிலையில் அமரன் திரைப்படம் உலக அளவில் முதல் நாளில் ரூபாய் 42.3 கோடியை வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது, சிவகார்த்திகேயன் நடித்த படங்களிலேயே முதல் நாளில் பெரிய வசூலை பெற்ற திரைப்படம் அமரன் திரைப்படம் தான், ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பால் இப்படம் முதல் ஏழு நாட்களில் உலக அளவில் ரூபாய் 168 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது, அமரன் சிவகார்த்திகேயன் கேரியரில் சிறப்பான தொடக்கத்தை பெற்ற படமாக அமைந்துள்ளது விரைவில் இப்படம் ரூபாய் 200 கோடியை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது..!!

Read Previous

ரேஷன் கடை ஊழியர்கள் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி..!!

Read Next

ஒவ்வொரு குடும்பத்திலும் தாமரை மலரத்தான் போகிறது அமைச்சர் சேகர்பாபுக்கு தமிழிசை பதிலடி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular