
தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிடுவதன் மூலம் உடலில் ஏற்படும் மாற்றங்கள்..!!
கறிவேப்பிலையில் நிறைந்துள்ள மருத்துவ குணங்கள் ஏராளம். கறிவேப்பிலையை பச்சையாக கழுவி விட்டு மென்று சாப்பிடலாம். ஆனால் இன்றைய காலத்தில் இருக்கும் ஒரு சில பெரியவர்களும் குழந்தைகளும் கறிவேப்பிலையை சாப்பிடுவதற்கு தயங்குகின்றனர். இந்நிலையில், தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் மாற்றங்களை பற்றி தற்போது இந்த பதிவில் பார்க்கலாம்.
தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்:
கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி கல்லீரலை பாதுகாப்பதோடு சீராக செயல்படவும் தூண்டும். முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தை காண்பதோடு முடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வோம். சர்க்கரை நோயாளிகள் தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வருவதன் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருப்பதை கண்கூட பார்க்கலாம். காலையில் பேரிச்சம் பழத்துடன் சிறிது கறிவேப்பிலையை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள ரத்த சிவப்பு அணுக்களின் அளவு அதிகரிப்பதோடு ரத்த சோகை போன்றவை நீங்கும். காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால் வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புகள் கரைந்து அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம். உடல் எடை குறைய நினைப்பவர்கள் கூட இந்த மெத்தடை பாலோ பண்ணுங்க.