உலகம் எங்கும் புதுப்புது சிறப்பம்சங்களை கொண்டு கார்கள் வெளி வருகிறது அந்த கார்களை வாங்குவதில் மக்கள் பெரும் மகிழ்ச்சியும் தனக்கென ஒரு அடையாளத்தையும் வைத்திருக்கும் நிலையில், தற்போது கார் சந்தையில் கார் வாங்குவதற்கான மக்களின் தேவைகள் குறைந்துள்ளதாகவும் கார் சந்தை நிலவரம் கூறியுள்ளது…
ஆகஸ்ட் மாதத்திற்கான கார் விற்பனையில் 1.06% கார் விற்பனை குறைந்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 3.47 லட்ச வாகனங்களை விற்பனை செய்துள்ளதாகவும் இந்த ஆண்டு 3.43 லட்சம் கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது என்று தகவல் வெளிவந்துள்ளது, மேலும் உலகத்தரத்தில் முன்னணித் தரம் வாய்ந்த நிறுவனங்களான ஹூண்டாய், டாட்டா மற்றும் மாருதி சுசுகி ஆகிய கார்களின் விற்பனை மிகவும் குறைந்துள்ளதாகவும் இந்த மாதத்திற்கான பட்டியில் வெளிவந்துள்ளது…!!