தொட்டிலில் உறங்கிய 5 மாத பச்சிளம் குழந்தையை கடித்துக்கொன்ற நாய்..!! திறந்துகிடந்த வீட்டில் புகுந்து வெறிச்செயல்..!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள விக்கிரபாத் மாவட்டம் தண்டூர் கிராமத்தில் வசித்து வருபவர் நீலம் தட்டு. இவருக்கும் திருமணம் முடிந்து மனைவி உள்ளார். நீலம் அங்குள்ள கல் உடைப்பு ஆலையில் பணிபுரிந்து வருகின்றார். அவரின் மனைவியும் கூலி தொழிலாளியாக பணிபுரிகிறார். தம்பதிகள் இருவருக்கும் ஐந்து மாதமாகும் பாபு சாய் என்ற பச்சிளம் குழந்தை உள்ளது.

இந்நிலையில் நேற்று நீலத்தின் மனைவி வேலைக்கு சென்றுள்ளார். வீட்டில் அவரின் ஐந்து மாத குழந்தை தந்தையின் பராமரிப்பில் இருந்த நிலையில் குழந்தையை உறங்க வைத்துவிட்டு அவசர வேலையாக அவர் நிறுவனத்திற்கு சென்றார். இவர்கள் தங்கி இருக்கும் இடமும் ஆலையும் அருகருகே உள்ளது என்பதால் உரிமையாளர் அழைத்தால் நேரில் சென்று வருவதை நீலமும் வாடிக்கையாக கொண்டுள்ளார்.

இதனிடையே நேற்று நீலம் தனது குழந்தையை தொட்டிலில் உறங்க வைத்துவிட்டு ஆலைக்கு சென்றுள்ளார். வீட்டில் குழந்தை உறங்கிக் கொண்டிருந்த நிலையில் குழந்தையை தெரு நாய் ஒன்று கடுமையாக தாக்கியுள்ளது. இதனால் குழந்தை துடிதுடித்து உயிரிழந்தது, வீட்டிற்கு வந்த நீலம் குழந்தையின் தொட்டிலில் ரத்தம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின் மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்து சென்ற போது குழந்தையின் மரணம் உறுதி செய்யப்பட்டது.

தற்பொழுது இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது .நாய் கடுமையாக குழந்தையை தாக்கிய தடயங்கள் கழுத்தில் கடிக்கப்பட்ட காட்சிகள் வெளியாகி உள்ளது.

Read Previous

கள்ளக்காதல் வயப்பட்ட இளைஞர் செருப்பு மாலையுடன் ஊர்வலம்..!! 5 பேரின் சிறுநீரை குடிக்கவைத்து அதிர்ச்சி செயல்..!!

Read Next

ஓரினசேர்கைக்கு எதிராக செயல்பட்ட தந்தை எரித்துக்கொலை..!! மகன் வெறிச்செயல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular