தொண்டையில் மீன் முள் சிக்கினால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!
நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்தே தொண்டையில் மீன் முள் சிக்கினால் ஒரு கைப்பிடி வெறும் சாதத்தை எடுத்து முழுங்கு மீன் முள் உள்ளே போய்விடும் என்று கூறுவார்கள். இந்நிலையில் இந்த காலகட்டத்தில் இருக்கும் பலருக்கும் தொண்டையில் மீன் முள் சிக்கினால் என்ன செய்வது என்பது தெரிவதில்லை அதைப் பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
தொண்டையில் மீன் முள் சிக்கினால் முதலில் சத்தமாக இருமல் செய்யுங்கள். அல்லது ஒரு பெரிய வாழைப்பழத்தை சாப்பிடுங்கள் இவ்வாறு சாப்பிட்டால் கண்டிப்பாக இந்த பிரச்சனை சரியாகிவிடும். அப்படி இல்லை என்றால் சோடா குடிப்பது வயிற்றில் உள்ள மீன் முல்லை கரைக்கும், ரொட்டியை சில நொடிகள் தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட்டாலும் தொண்டையில் மீன் முள் சிக்கினால் அது சரியாகிவிடும் ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணையை குடிப்பது மிகவும் நல்லது என கூறுகிறார்கள் குழம்பு சேர்க்காமல் வெறும் சாதம் சாப்பிட்டாலும் முள் போய்விடும் எனக் கூறுகிறார்கள் மேலும் இவ்வாறு செய்தும் உங்களுக்கு ஏதாவது மார்பில் வலி மற்றும் சளியில் ரத்தம் தொண்டையில் வீக்கம் மற்றும் சிராய்ப்பு எதையும் சாப்பிடுவோ அல்லது குடிக்க முடியவில்லை என்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை பார்த்து தொண்டையில் மீன் முள் சிக்கியதை கூறி அதற்கான மருத்துவத்தை செய்யுங்கள்.




