காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு போன்ற பல காரணங்களாலும் சிலருக்கு சளி இருமல் தொண்டைச் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படலாம். குறிப்பாக தொண்டைச் சார்ந்த பிரச்சினைகளான தொண்டை வலி மற்றும் தொண்டை புண் அல்லது அலர்ஜிக்கு என்ன செய்ய வேண்டும் என்று பலருக்கும் தெரியாது. நான் இதற்கு வீட்டிலேயே வீட்டில் உள்ள பொருட்களை வைத்து தீர்வு காணலாம். தொண்டை கரகரப்பு தொண்டை அலர்ஜி போன்றவற்றிற்கு சுடுநீரில் உப்பு போட்டு வாய் கொப்பளித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சுடுநீரில் உப்பு போட்டு வாய் கொப்பளிப்பதன் மூலம் நமக்கு ஏற்படும் தொண்டை வலி விரைவாக குணமடையும். மேலும் இந்த உப்பு நீர் தொண்டை வலி அல்லது தொண்டை எரிச்சல் தொடர்புடைய பல நோய்களிலிருந்து நிவாரணம் அளிக்கும். மேலும் சிலருக்கு சளி மற்றும் சைனஸ் தொற்றுகள் ஏற்படும் அதை இவ்வாறு உப்பு கரைசல் நாம் உபயோகிப்பதன் மூலம் இதை தடுக்கலாம்.
இதைப் போலவே சாதாரண தண்ணீரில் சில தொண்டுகள் நறுக்கி இஞ்சி போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை நாம் அருந்துவதன் மூலம் தொண்டை கரகரப்பு பிரச்சனைகளிலிருந்து தீர்வு காணலாம். மேலும் சிறிதளவு தேர் சேர்த்தும் பருகலாம். தொண்டை சம்பந்தமான பிரச்சினைகளுக்கு இந்த உப்பு கரைசல் தான் சிறந்த மருந்தாக செயல்படுகிறது. நீங்களும் இந்த உப்பு நீரை கொண்டு தொண்டை பிரச்சனைகளுக்கு தீர்வு காணுங்கள்.




