இன்றைய சூழலில் பலரும் உடலில் ஏதோ ஒரு பிரச்சனையில் அவதிப்பட்டு வருகின்றனர் அப்படி இருக்கையில் தொண்டை பிரச்சினையாக இருக்கட்டும் அல்லது கண்கள் பிரச்சினையாக இருக்கட்டும் நம் வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை வைத்து நம்மால் சரி செய்ய முடியும்…
தொண்டையில் புண் இருந்தால் டீ போடும்போது அதில் கிராம்பு இஞ்சி மிளகு ஏலக்காய் பட்டை போன்றவற்றை சேர்த்து டீ போட்டு குடிக்கலாம் இதன் மூலம் தொண்டையில் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கும், அதேபோல் நாட்டுக்கோழியில் வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளதால் கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது, வாழைப்பூ சாறுடன் கடுக்காய் பொடி சேர்த்து குடிக்க மூல நோய் குணமாகும், பச்சை பட்டாணிகள் ஏராளமான சத்துக்களை உள்ளடக்கியது இது நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் வைட்டமின் ஏ பி சி இ கே துத்தநாகம் பொட்டாசியம் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துகளின் நல்ல ஆதாரமாக உள்ளது, உங்கள் குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மேம்பட சில வழி இருக்கிறது, உடல் ஆரோக்கியத்திற்கு வெளியில் விளையாடுவதற்கான சுதந்திரத்தை கொடுங்கள், அதேபோல் உணவை ஒருபோதும் திணிக்காதீர்கள் நன்றாக ஓடியாடி விளையாட விட்டு பிறகு உணவை தரும் பொழுது குழந்தைகள் பசியோடு சாப்பிடும்,பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்ண பழக்கங்கள் திரையின் முன் அமரவைத்து சோறு ஊட்டுவதை தவிர்த்து விடுங்கள்…!!




