
துப்பாக்கி தோட்டாவை மட்டும் பையில் வைத்திருக்கும் பட்சத்தில் அது குற்றமில்லை என்று கேரள உயர் நீதி மன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
மகாராஷ்டிராவை சார்ந்த ஒரு தொழிலதிபர் கண்ணூர் விமான நிலையத்திற்கு வந்த பொது அந்த தொழிலதிபதிகளிடமிருந்து துப்பாக்கி தோட்டாக்கள் சில பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அந்த தொழிலதிபர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கிலிருந்து அந்த தொழிலதிபர் தன்னை விடுவிக்க வேண்டி கேரள உயர் நீதி மன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவினை விசாரித்த கேரள உயர் நீதி மன்றம் ஒரு வித்தியாசமான தீர்ப்பினை வழங்கி உள்ளது. இதில் தங்களது கையில் துப்பாக்கியோ அல்லது வெடிக்க செய்வதற்கான உபகரணமோ எதுவும் இல்லாமல் துப்பாக்கி தோட்டாவை மட்டும் வைத்திருந்தால் அதை குற்றமாக பார்க்க முடியாது என்று நீதிமன்றம் கூறி உள்ளது.