
இந்திய ஆடவர் அணி, அடுத்த மாதம் பங்களாதேஷுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட T20 தொடரிலும், 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணியை விரைவில் பிசிசிஐ நிர்வாகம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பரபரப்புக்கு மத்தியில், இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ், தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓர் ஸ்டோரியை பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறார்.
அதில் தோனியின் வாழ்க்கை வரலாற்று படமான ms dhoni the untold story புகைப்படத்தை பதிவிட்டு எமோஜிகளை இணைத்துள்ளார். தற்போது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.