தோனி செய்திருக்கும் சாதனைகள்..!! யார் நினைத்தாலும் தொட முடியாது..!!

ஐபிஎல் களம் சூடு பிடித்து வருகையில் நேற்று ஒரு முக்கிய செய்தி வந்தடைந்தது. அதுதான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான ருத்ராஜ் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த தொடரில் விளையாட மாட்டார் என்றும் அவருக்கு பதிலாக சென்னை அணியின் இளம் விக்கெட் கீப்பர் வீரரான மகேந்திர சிங் தோனி அவர்கள் கேப்டனாக பதவி ஏற்பார் என்றும் வெளிவந்தது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியிலும் சோகத்திலும் இருந்து வருகின்றனர். இந்த வகையில் இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி செய்த சாதனைகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வெளியிட்டுள்ளது.

அதாவது கேப்டனாக அதிக கோப்பைகளை கைப்பற்றிய ரெக்கார்டுகளில் ரோஹித் சர்மாவுடன் இணைந்து இருக்கிறார் தோனி அவர்கள். மேலும் கேப்டனாக அதிக வெற்றிகளை சுவைத்த ஒரு வீரராகவும் இவர் திகழ்கிறார். வெற்றி சதவீதம் அதிகம் உள்ள கேப்டனாகவும் மகேந்திர சிங் தோனி தான் வலம் வருகிறார். தன் அணியை அதிக முறை பைனல்ஸ்க்கு கொண்டு சென்ற கேப்டனாக இருக்கும் ஒரே நபர் தான் மகேந்திர சிங் தோனி. மேலும் இன்று அவர் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார்.

அதாவது ஐபிஎல் இல் முதல் Uncapped வீரர் கேப்டனாக பதவி ஏற்கும் சாதனையையும் இவர் படைக்கவிருக்கிறார். இவர் கேப்டனானதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றன. மேலும் சமூக வலைதளங்களில் இவரது பேச்சை இரு முறை ஒரு நாளைக்கு கேட்கலாம் என்று மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர்.

Read Previous

இரட்டை இலை சின்னம் யாருக்கு..!! எலக்சன் கமிஷன் விசாரணை..!!

Read Next

அமெரிக்க சீன வர்த்தக போர்..!! ஹாலிவுட் படங்களுக்கு வந்த பெரும் பாதிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular