தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத முன்னணி ஹீரோக்களில் ஒருவராக கொடிகட்டி பறந்து வருபவர் தான் நடிகர் விஜய். தற்போது இவர் AGS தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் GOAT திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் கடந்த பிப்ரவரி மாதம் புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கினார். அதற்கு தமிழக வெற்றி கழகம் (TVK) என்று பெயர் சூட்டியுள்ளார். இதற்கு ஆதரவும் விமர்சனமும் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் இக்கட்சி தொடர்பாக ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது GOAT படத்தின் புரமோஷனுக்காக ‘தமிழக வெற்றி கழகம்’ கட்சியின் பெயரை பயன்படுத்தக் கூடாது என ரசிகர்களுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக ‘தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என குறிப்பிட்டு ஒரே மாதிரியான ஸ்டிக்கர் தயாராகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.