சுரேஷ் (வயது 36) என்பவர் சேலம் மாவட்டத்தில் உள்ள சுக்கம்பட்டி பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமான நிலையில் இந்துமதி ( வயது 32) என்ற மனைவியும் ஒரு மகனும் இருக்கிறார்கள். இவர்கள் அயோத்தி பட்டினம் ராம்நகர் பகுதியில் குடும்பத்தோடு வாசித்து வருகிறார்கள்.
இந்நிலையில் சுரேஷ் க்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சுரேஷ் அவரது மனைவியின் நடத்தையின் மீது சந்தேகப்பட்டு தகராறு செய்துள்ளார். இதேபோன்று நேற்று முன்தினம் இரவு அன்று கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இந்துமதி பக்கத்து வீட்டிற்கு தூங்குவதற்காக சென்றுவிட்டார். இந்த நிலையில் நேற்று காலை இந்துமதி வீட்டுக்கு வந்தபோது கணவன் மனைவிக்கு இடையே அதிகமாக தகராறு ஏற்பட்டு சுரேஷ் கோபத்தில் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தன் மனைவியின் வயிற்றில் சரமாரியாக குத்தினார்.
இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இந்துமதி உயிரிழந்துள்ளார். இதற்கிடையில் சுரேஷ் தன் மனைவியை கொலை செய்த பிறகு அந்த இடத்திலேயே இருந்தால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களுக்கு தெரிய வரவே அவர்கள் உடனடியாக போலீசாரிடம் தகவல் கொடுத்துள்ளனர்.
அந்த தகவலின் பெயரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இந்துமதியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில் சுரேஷ் கைது செய்துள்ளனர். மேலும் அப்பகுதியில் இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.




