கமலஹாசனுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்..
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் இன்று தனது எழுபதாவது பிறந்தநாளை கொண்டாடுகிறார் இந்த நிலையில் கமலஹாசனுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார் இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், பிறக்கின்ற புதுமைகள் எல்லாம் இந்திய திரை உலகின் வாயிற் கதவுகளை திறக்கின்ற கலை ஞானிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் திரைக்களம் தொடங்கி அரசியல் களம் வரை முற்போக்கு பகுத்தறிவு கருத்துக்களை பரப்புரை செய்யும் அருமை நண்பர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசனுக்கு தொண்டு சிறக்க விளைகிறேன் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார், மேலும் நடிகர் கமலஹாசன் பல சாதனைகளை செய்ய வேண்டும் என்றும் தமிழ்த்துறை உலகத்திற்கு அவர் ஆற்ற வேண்டிய கடமைகள் பல உள்ளது என்றும் அவரைப் பற்றி பெருமிதமாக பேசி வாழ்த்துக்கள் கூறியுள்ளார் முதலமைச்சர்..!!




